அவுஸ்திரேலியாவில் தேர்தல் திகதி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் மே மாதம் 18 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன

ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்கிரோவை இன்று காலை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் தேர்தலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்

இதன் பின்னர் காலை 8.29 மணியளவில் 45 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான சம்பிராதாய பூர்வ நிகழ்வு இடம்பெற்றது

இதன் பின்னர் ஆளுநர் நாயகம்  காலை 8.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்

இதன் பின்னர் உரையாற்றியுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் வலுவான பொருளாதாரத்தை  உருவாக்ககூடியவர் யார் என்ற தெரிவையே மே 18 ம் திகதி வாக்காளர்கள் மேற்கொள்ளப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்

2013 இல் தொழில்கட்சியினர் விட்டுச்சென்ற பொருளாதாரத்தை சரிசெய்வதற்கு ஐந்து வருடங்கள் பிடித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை தொழில்கட்சி மாத்திரமே எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகின்றது என தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் பில் சோர்ட்டன் உள்கட்சி மோதலால் பிளவுபடாத அரசாங்கத்தை தொழில்கட்சியினால் மாத்திரமே வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆறு வருடங்கள் காணப்பட்ட அரசியலை விட சிறந்த அரசியல் அவுஸ்திரேலியர்களிற்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த தேர்தல் அவுஸ்திரேலிய மக்கள் வாழ்க்கை செலவு குறித்ததாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்