உலகாளப் பிறந்த நம் தேசத்து வீரம்

நரிகளைக் கொல்லப்
பிறந்த சிறுத்தை -இவன்
நாட்டினான் எம் மண்ணில்
ஈழ மறத்தை

வலியோரை வதைக்க
வந்த நெருப்பு -அவன்
வாழ்விலே தமிழர் தம்
காவல் பொறுப்பு

பகையுக்கு முன் நின்று
பாய்ந்திடும் வேழம் -இவன்
வகையுக்கு படை கட்டி
வாய்த்திடும் ஈழம்

வீரத்தின் வேர் கொண்டு
வெடித்திடும் வேகம்-அவன்
தீரத்தில் யார் வந்தும்
தீர்த்திடா யாகம்

படை கொண்டு வந்தாலே
பாய்ந்திடும் வேங்கை-இவன்
களம் வந்து நின்ற பின்
ஊதிடும் சங்கை

யாருக்கும் பணியாதா
உருவத்தின் தோற்றம் -அவன்
ஊருக்கே விளங்காத
கணிதத்தின் தேற்றம்

வல்லமைக்கு வாய்த்த நம்
கரிகாலச் சோழன்-அவன்
வரியுடை தரித்தவன்
பகையுக்கே காலன் .

கவிப்புயல் சரண்