கம்பியின் பிடியில் கட்டப்பட்டு கிடப்பது கண்காட்சி பொருளல்ல காலத்தின் பறவை கரிகாலனின் பறக்கும் குதிரை அது

பிரபஞ்ச ஏட்டில் முதல்முதல் பறக்க கற்று கொடுத்த எம் இனத்தின் கலியுக பறவை இதுதான்

எம்மை தலைநிமிர வைத்துவிட்டு இன்று தலைகுனிந்து கிடக்கிறது
பார் தமிழா கவிழ்ந்து கிடந்தாலும் கம்பீரம் குறையவில்லை .

வல்லரசுகளின் ரேடரில் மண் தூவிவிட்டு எதிரியின் இலக்கை தேடி சென்று தகர்த்தெறிந்த வான்கரும்புலிகளின் இரும்பு பறவை இது

எட்டு நாடுகள் இனைந்து கட்டிப்போட்ட மேகவெளியை சற்றேனும் மதிக்காது சமர் செய்து வென்ற யடாயு இது பிரபாகரனின் சொல்லிற்காக பறந்து இந்த துரோக இனத்திற்காய் வீழ்ந்தது.
மார்பில் ஏறிய குண்டை எடுத்து மக்களுக்கு காட்டியிருக்கிறான் பகையே நீ வாழ்க….
இன்று நீ தொங்கவிட்டிருப்பது தோல்வியின் எச்சமல்ல எம் வீரத்தின் உச்சம்….
கொலண்னாவ பற்றி எரிகையில்தானே பலருக்கு தமிழர் மரணத்தில் இரக்கம் வந்தது …..
அநுராதபுரத்தில் வெடிகள் வெடித்த போதுதானே எம் மக்கள் பட்ட அவலம் புரிந்தது ……
இருபது விமானங்களை வானில் பறக்கவிட்டும் உன்னால் இலக்கை தாக்க முடியவில்லையே மூடா……..
இரண்டே இரண்டு பறவை எம் கரிகாலன் வளர்த்த இரும்பு பறவை இதுதானே உன் இருப்பை சிதைத்தது மறவாதே…..
துரோகம் செய்த சிறுநீரில் கழுத்துவரைக்கும் தாண்டபின்னர் தலையை காக்க தயாரான கடைசி ஆயுதம் இது என்பது எத்தனை பேருக்கு தெரியும்!!!!!

கண்ணீர்மல்க “அண்ணனை காப்பத்துங்கோ”என கடிதம் எழுதிவிட்டு வான் #கரும்புலியாய் வெடிக்க வீரர் சுமந்த வாகனம் இது எத்தனை பேர் அறிவார்

எம்மினமே தற்கால நிம்மதிக்காய் பெருமூச்சு விடாதே எல்லாம் இன்னொரு விச பரீட்சையில் மாறும் அப்படி தற்கால நிம்மதி உனக்கு பிடித்து போனால் அதற்று தலையணை தந்தது இந்த இரும்பு தகடுகள் என்பதை மறவாதே……………