கோத்தாவின் ரீட் மனு மீதான பரீசீலனை 26 ஆம் திகதி

Sri Lanka's Secretary of Defense Gotabaya Rajapaksa listens during a news conference in Colombo January 24, 2013. REUTERS/Dinuka Liyanawatte/Files

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் பேரணை மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பனிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் தமக்கு எதிராக நிரந்தர விஷேட மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய தடைவிதித்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில் குறித்த மனு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.