ஜனாதிபதி மீண்டுமொரு அரசியல் தவறு செய்துவிட்டார்-மைத்திரக்கு மாலைபோட்டு வரவேற்ற மாவை சாடல்

யாழ். பல்கலைக்கழக உபவேந்தரை பதவியில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் ஜனாதிபதி மைத்ரி மீண்டுமொரு அரசியல் தவறு செய்துவிட்டார்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது;

யாழ்.உபவேந்தர் பல்கலைக்கழகத்தில் எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்க மாட்டார் . மாணவர்களை கைது செய்து மீண்டும் அவர்களை தீவிரவாத சிந்தனைக்குள் தள்ளிவிட வேண்டாம்.உபவேந்தரை மீண்டும் சேவையில் அமர்த்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ் மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.அவர்கள் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்களா?அல்லது அதில் ஈடுபாடு கொண்டார்களா ?அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள் . இது முற்றிலும் தவறு.அவர்கள் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்தியா உட்பட்ட நாடுகளின் உளவுத்துறை கூறியிருந்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் மீது இந்த சம்பவத்திற்காக ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளியிடக் கூடாது.

தமிழர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இங்கும் கூட தமிழர்களை பாதுகாக்க தவறிவிட்டது அரசு.நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு கலவர சம்பவத்திலும் போர்க்காலத்தில் கூட தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது . அந்த இஸ்லாமிய தீவிரவாதம் தமிழர் பகுதியில் தலைதூக்க அனுமதிக்க முடியாது.</p>
<p>என்றார் மாவை