டெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!

ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கை டெல்லி ஹபிடல் அணி நிர்ணயித்துள்ளது.

மும்பை மைதானத்தில் ஆரமபமாக இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்பிரகாரம் முதலில் களமிறங்கிய டெல்லி அணி, ரிஷாப் பந்த் மற்றும் கொலின் இன்ராம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக ரிஷாப் பந்த் அட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் மெக்லெனகான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போது மும்பை அணி 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.