நல்லூரானே

கற்பூர வேலவா
கற்பூரம் எரிகிறது
கரும்புகை வானைத்தொடுகிறது….

ஏன் இன்னும்
எம் கண்ணீர்
உனக்கு தெரியவில்லை. …?? ? ? ?

விலைபேச முடியாத -எம்
உயிர்ச் சொத்துக்கள்
விலைபோன அரசியல் சகுனிகளால்
விளையாட்டு பொருளாகிக்கிடக்கிறது…..

ஆறுபடை வீடுகொண்ட
ஆறுமுகனே
நம்முயிர் நிரந்தர இளைப்பாறுமுன்னே
படைமுகமுக்குள் புகுந்துந்தன்
“நரகாசூரவதந்தனை”நிகழ்த்தி
வாலிப இளவல்களை வழிகாட்டியழைத்துவர மயில்வானம்மீதேறி பறந்திடமாட்டீரோ……

கந்தசாமியாரே
உம் வேலாயுதம் தனைச் சுழற்றி
ஆசாமிகள் கதைமுடித்தெமக்கு
ஒரு நல்ல தீர்வுதரமாட்டீரோ……

திக்கெட்டும்
உம் கருணை உண்மையெனில்
திக்குத்திசையறியாது தவிக்கும் எம்பிள்ளைகளுக்கு
நற்திசை காட்டிநில்லுமையா……

சூடம் எரியுதையா எம் நெஞ்சத்து சூடுதாங்கமலே…..

கண்ணீர் தெறிக்குதப்பா-எம்
கண்களில் வெப்பம் தணியாமலே. ….

நல்லருள் தாருமையா
நானிலம் போற்றும் நாயகனே…..

தேங்காயுடையதைய்யா
உடைந்துபோன எம் இதயச்சிதறல்கள்பட்டு…

து.திலக்,
10.07.2018,
00:46.