நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்!

நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் இன்று வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்