புது சர்ச்சையில் ஃபேஸ்புக்!

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை முழுமையாக மறைக்க முயற்சித்ததாக ஃபெடரல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் தொடர்புடைய கிரிஸ்டோபர் வைல் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என ஃபெடரல் அதிகாரிகள் கருதுகின்றனர்.
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் கிட்டத்தட்ட 8.7 கோடி பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் கைமாறியைது தனக்கு தெரியாது என்றவாக்கில் அந்நிறுவனம் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்ட பயனர் விவரங்களை கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது பல்வேறு அரசு துறைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீதான விசாரணைக்கு ஃபேஸ்புக் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகிறது.