மகிந்த,சம்பந்தனை சந்திக்கவுள்ளது ஜே.வி.பி.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த தயாராகிவருகிறது ஜே.வி.பி.

அடுத்தவாரம் முதல் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாகஒழிக்க கோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. எனினும், அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையிலேயே குறித்த யோசனைக்கு ஆதரவு திரட்டும் வகையில் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது.