யாருக்கும் தெரியாமல் கட்டுநாயக்க வந்துள்ள விமானம்!

பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

விமான நிலையத்தில் இருக்கின்ற அந்த விமானத்தை இலங்கை சுங்கமோ விமானப் படையினரோ பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் அமைக்கப்பட உள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்காக கொண்டு வரப்பட்ட உபகரணங்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக பொதுஜன பெரமுனவால் பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் பின்னர் பாராளுமன்றத்தில் பிரதமர் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என்று தெரிவித்ததாகவும் எஸ்.எம். சந்திரசேன கூறினார்.