விறுவிறுப்பான ‘HUTCH Sri Lanka Super Series 2019’விரைவில் ஆரம்பம்!

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பான Hutch, இலங்கை பந்தய வீரர்கள் சம்மேளனத்துடன் (SLARDAR) மீண்டும் இவ்வாண்டு கைகோர்த்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட ‘HUTCH Sri Lanka Super Series 2019’ நிகழ்வுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

பந்தய ரசிகர்களுக்கு புகழ்பெற்ற 2019 Super Series பிரதான பந்தயங்களை கண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும். இதில் இலங்கையின் சிறந்த பந்தய வீரர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதுடன், சம்பியன் பட்டத்துக்காக வருடம் முழுவதிலும் போட்டியிடுவார்கள். HUTCH Sri Lanka Super Series 2019 நிகழ்வில், பத்து பந்தயங்கள் இடம்பெறும்.

இந்த விறுவிறுப்பான போட்டி நிகழ்வு நவம்பர் மாதம் விருதுகள் வழங்கலுடன் நிறைவு பெறும்.

இந்த அனுசரணை தொடர்பாக Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், ´SLARDAR உடன் எமது பங்காண்மையை மற்றுமொரு ஆண்டுக்கு முன்னெடுத்துச் செல்வதையிட்டு பெருமை கொள்கிறோம். மோட்டார் விளையாட்டுக்களுடன் விறுவிறுப்பு மற்றும் சாகசம் ஆகியன பிணைந்துள்ளன. 4G புரோட்பான்ட் சேவைகளை நாம் அண்மையில் அறிமுகம் செய்திருந்ததனூடாக ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.´ என்றார்.

இது போன்றதொரு முக்கியமான நிகழ்வுக்கு Hutch அனுசரணை வழங்குவதனூடாக தனது வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தி, முழுக் குடும்பத்துக்குமான களிப்பூட்டும் அனுபவத்தை சேர்க்க முன்வந்துள்ளது.

மேலும், நாடு முழுவதிலும் 4G வலையமைப்பை விஸ்தரிப்பதனூடாக, இலங்கையில் டேடா மற்றும் புரோட்பான்ட் வளர்ச்சிக்கு Hutch பங்களிப்பு வழங்குகிறது. இதனூடாக பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளுக்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.